
சாதாரண தரப் பரீட்சை! யாழ்.மத்திய கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகியுள்ளன.
அந்தவகையில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (Jaffna Central College) மாணவர்கள் இருவர் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அபிசாந்த் திஷான் மற்றும் எல்.விமலக்சன் ஆகிய இரு மாணவர்களே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை, கே.தனுசியன், ஆர்.நிலவன், சி.நெடுமாறன், எஸ்.பவித்ரன், எஸ்.ஜபேஷ் மற்றும் கே.பிரம்ஷாந்த் ஆகியோர் 8ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அந்தந்தப் பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகள் பட்டியலைப் பதிவிறக்கி, அச்சிடப்பட்ட பிரதியைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள் பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறு பட்டியலைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்வையிடவோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.