யாழில் குடும்பஸ்தரை கொடூரமாக தாக்கி கொன்ற சந்தேக நபர் கைது

யாழில் குடும்பஸ்தரை கொடூரமாக தாக்கி கொன்ற சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்று (24) இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (25) மண்டைதீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கத்திக் குத்துக்கு இலக்காகிய சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

யாழில் குடும்பஸ்தரை கொடூரமாக தாக்கி கொன்ற சந்தேக நபர் கைது | Man Brutally Killed In Jaffna Suspect Held

தாவடியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று (25) பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.