நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா ஏற்பாடுகள் மும்முரம்!

நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா ஏற்பாடுகள் மும்முரம்!

 வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கெடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் நல்லூரானின் பெருந்திருவிழாவை காண ஆவலுடன் உள்ளனர்.

கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சபத்தை முன்னிட்டு ஆலய வெளி வீதியினை சுற்றி சிவப்பு வெள்ளை துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா ஏற்பாடுகள் மும்முரம்! | Nallur Kandaswamy Kovil Festival In Jaffna 2025

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா ஏற்பாடுகள் மும்முரம்! | Nallur Kandaswamy Kovil Festival In Jaffna 2025

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும் ,

நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா ஏற்பாடுகள் மும்முரம்! | Nallur Kandaswamy Kovil Festival In Jaffna 2025

24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் , மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா ஏற்பாடுகள் மும்முரம்! | Nallur Kandaswamy Kovil Festival In Jaffna 2025

இந்நிலையில் உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் இருந்து எம்மவர்கள் நால்லூர் கந்தன் ஆலய பெரும் திருவிழாவை காண ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.