இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் ; சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி

இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் ; சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் ; சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி | Chinese Nationals Arrested In Sri Lanka

சந்தேக நபர் 28 வயதுடைய சீன பிரஜை என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 1 ஐபேட் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டன. சந்தேக நபர் 52 வயதுடைய சீன பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.