
ஜூலை மாதத்தில் சடுதியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 13 இலட்சத்து 41 ஆயிரத்து 953 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 32,925 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 20,160 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 13,530 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 11,146 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 9,309 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 9,086 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,338 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் 187,810 நாட்டுக்கு வருகை தந்த நிலையில் இந்த வருடத்துடன் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
அத்துடன் மே மற்றும் ஜூன் மாதங்களை விட ஜூலை மாதத்தில்அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.