யாழில் பெரும் சோகம் ; குடும்பஸ்தரின் உயிரை பறித்த கடன்

யாழில் பெரும் சோகம் ; குடும்பஸ்தரின் உயிரை பறித்த கடன்

யாழில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் பெரும் சோகம் ; குடும்பஸ்தரின் உயிரை பறித்த கடன் | Issue Bargaining Jaffna Tragedy That Took Lives

குறித்த நபருக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

இந்நிலையில் மனவிரக்தியால் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.