இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி!

இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறவிடுமாறு உள்ளூர் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் உணவுப் பாதுகாப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை விவசாயிகள் தொடர்ச்சியாக முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதும் கூட இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறவிடப்படுவதாக கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி! | Tax For Export Onion Potatoes Sri Lanka

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு இருபது ரூபாவும், ஒரு கிலோகிராம் சின்ன வெங்காயத்திற்கு ஐம்பது ரூபாவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு பத்து ரூபாவும் வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உணவுப் பாதுகாப்பு குழுவிடம் விவசாயிகளின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு தற்போது குறித்த கோரிக்கையை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.