கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

கனடாவில் (Canada) கடந்த 2025 ஜூலையில் வீடு விற்பனையானது கடந்த ஆண்டை விட 6.6 வீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது கனடிய வீட்டுமனை ஓன்றியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த மாதங்களில் மந்தமாக இருந்த வீட்டுச் சந்தை மீண்டும் உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலையில் மொத்தம் 45,973 வீடுகள் விற்கப்பட்டுள்ளதுடன் இது 2024 ஜூலையில் 43,122 ஆக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல் | Home Sales In Canada Good Announcement

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையானது 3.8 வீதம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வீடு விற்பனை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதுடன் ரொரண்டோவில் வீட்டு விற்பனையானது 33.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.