புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரி : ஏற்பட்டுள்ள சிக்கல்

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரி : ஏற்பட்டுள்ள சிக்கல்

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) வாசகர்களுக்குத் தள்ளுபடி விலையை வழங்குவதற்கு பெரும் தடையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் (Sri Lanka Book Publishers' Association) நேற்று (21) தெரிவித்துள்ளது.

2025 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே குறித்த சங்கத்தின் செயலாளர் லசித உமகிலிய இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் கண்காட்சிக்கு வருவோரிடம் நூல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) குறைக்கக் கோரும் பொது மனுவில் கையெழுத்திட அழைக்கப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரி : ஏற்பட்டுள்ள சிக்கல் | 18 Percent Value Added Tax Imposed On Books

2025 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.

புத்தக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும், பெறுமதி சேர் வரி (VAT) தொடர்ந்தும் வெளியீட்டாளர்கள் குறிப்பிடத்தக்கத் தள்ளுபடிகளை வழங்குவதைத் தடுக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.