கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி ; எமனாக மாறிய மது

கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி ; எமனாக மாறிய மது

இந்தியா ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வாழ்க்கைக்கு மது எமனாக மாறியது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் முதல் மனைவி இறந்த நிலையில் 36 வயதுடைய பெண் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து செய்து கொண்டார் .

குறித்த தம்பதியினர் இருவர் சென்னையில் ஜோன்ஸ் சாலையில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் இருவரும் வேலை பார்த்தனர்.

கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி ; எமனாக மாறிய மது | Wife Stabs Husband With Knife Madhu Becomes Eman

 நேற்று முன்தினம் இரவு இருவரும் ஜோடியாக அமர்ந்து மது அருந்த தொடங்கிய இருவரும் போதை அதிகமானவுடன் அடிதடி சண்டையில் கணவன் மனைவியின் கழுத்தை நெரிக்க மனைவி திடீரென்று அருகில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்திவிட்டார்

இந்நிலையில், கணவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சர்தார் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் கத்தி குத்தப்பட்ட இடத்தில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் குறித்த நபர் மீண்டும் மயங்கி விழுந்தார்.

இதனால் அவரை ராயப்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்து கணவனை கத்தியால் குத்திக் கொன்றதாக மனைவியை கைது செய்துள்ளனர்.