தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; இரு ஆசிரியர்கள் வைத்தியசாலையில்

தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; இரு ஆசிரியர்கள் வைத்தியசாலையில்

பதவியா - ஹெப்பட்டிபொலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; இரு ஆசிரியர்கள் வைத்தியசாலையில் | Teacher Death In The Tamil Area

பதவியா பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றிற்கு சென்று விட்டு கார் வாகனத்தில் திரும்பிய ஆசிரியர்கள் பதவியா - ஹெப்பட்டிக்கொல வீதியில் உள்ள மகாநெட்டியாவ பகுதியில் பயணித்த போது எதிரே வந்த பிக்கப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

வவவுனியாவை சேர்ந்த  ஆசிரியர் ஒருவரே மரணமடைந்துள்ளார். மேலும் இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹெப்பெற்றிபொலாவா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.