தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் சிறிதளவு அதிகரித்துள்ளது.
இன்றைய (21.10.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,319,060 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 46,530 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 372,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 42,660 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 341,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 40,720 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 325,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.