மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

தற்போது இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, எதிவரும் வரும் நாட்களில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மானிங் சந்தை வணிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். எம். உபசேன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“கடந்த சில நாட்களில் ஏற்பட்ட கடும் மழையால் பல பயிர்ச்செய்கைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதன் விளைவாக, அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது,” என குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம் | Vegetable Prices Will Raise

மழை பெய்யும் முன் விலைகள் குறைவாக இருந்ததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் ஆனால் தற்போதைய வானிலை மாற்றத்தால் விலை உயர்வு பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வானிலை மாற்றம் தற்போது மரக்கறி விலைகளில் முக்கிய தாக்கம் செலுத்துகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பதுளை மாவட்டத்தின் கெப்பெட்டிப்பொல மற்றும் ஹபராகலா பகுதிகளில் உள்ள பல மரகதோட்டங்கள் கடும் மழையால் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானிலை மாற்றத்தினால் சந்தையில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் இதனால் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.