யாழில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிர்மாய்ப்பு!

யாழில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிர்மாய்ப்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்க்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

யாழில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிர்மாய்ப்பு! | Drug Addict Girl In Jaffna Killed Herself

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றையதினம் (20) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தியுள்ளனர்.