யாழில் நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

ஒருநாள் காய்ச்சல் காரணமாக யாழில் நேற்றையதினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 42 வயதுடைய சிவபாலசிங்கம் காந்தரூபன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு | Young Family Member Dies Due Pneumonia In Jaffna

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்றையதினம் தனது தாயாரின் வீட்டில் இருந்தவேளை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

நிமோனியா தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.