நாளுக்கு நாள் குறைவடையும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

நாளுக்கு நாள் குறைவடையும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் தங்கத்தின் விலையானது தொடர்ந்தும் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுடன் (22) ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று (22) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 335,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (23) 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 307,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் குறைவடையும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல் | Gold Prices Are Falling Day By Day In Sri Lanka

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 இலட்சத்தைக் கடந்திருந்த 24 கரட் தங்கப் பவுணின் விலை படிப்படியாக குறைவடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.