வாகன விலைகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட செய்தி

வாகன விலைகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட செய்தி

2026ஆம் ஆண்டில், வாகன இறக்குமதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்த தேவை காரணமாக, 2025ஆம் ஆண்டில் இலங்கையர்கள் வாகன இறக்குமதிக்காக சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது முந்தைய மதிப்பீட்டான 1 பில்லியன் டொலர்களை விட அதிகம் என்று ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வாகன விலைகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட செய்தி | Vehicle Import Sri Lanka Vehicle Price Sri Lanka

மேலும், வாகனங்கள் மீதான குறிப்பிடத்தக்க வரிகளுடன் இணைந்து, அதிக இறக்குமதி அளவுகள் அரசாங்க வருவாயை அதிகரிக்கும் மற்றும் பல ஆண்டுகளில் முதல் முறையாக வரவு - செலவு திட்ட பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்தப் பின்னணியில், வாகனங்களுக்கான தேவை ஏற்கனவே வலுவான ஆர்வத்தின் ஆரம்ப அலைக்குப் பிறகு குறையத் தொடங்கிவிட்டதாக தொழில்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.