யாழில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் பெரும் துயரம் ; மரண விசாரணையில் வெளியான தகவல்
யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஈரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படடுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.