பாடசாலைக்கு அருகில் விபச்சார விடுதி ; வசமாக சிக்கிய பெண்கள்

பாடசாலைக்கு அருகில் விபச்சார விடுதி ; வசமாக சிக்கிய பெண்கள்

ஹெரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மூன்று பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்கு அருகில் விபச்சார விடுதி ; வசமாக சிக்கிய பெண்கள் | Brothel Operating Near School Causes Outrage

கைதுசெய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு , மாத்தறை மற்றும் நிட்டம்புளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.