தமிழர் பகுதியொன்றில் அதிரடி காட்டிய இளைஞர்கள் ; மாடு திருட வந்தவர்களுக்கு நேர்ந்த கதி

தமிழர் பகுதியொன்றில் அதிரடி காட்டிய இளைஞர்கள் ; மாடு திருட வந்தவர்களுக்கு நேர்ந்த கதி

மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (25) மதியம் மாடுகளை திருடிய நபர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நானாட்டான் பிரதேசத்தின் உமநகரி வீதியில் நேற்று (24) இரவு மாடுகளை கொண்டு செல்வதற்காக சந்தேகிக்கும் வகையில் ஆட்டோவில் சுற்றித்திரிந்த மூவர் அப்பகுதி இளைஞர்கள் சிலரை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளனர்.

தமிழர் பகுதியொன்றில் அதிரடி காட்டிய இளைஞர்கள் ; மாடு திருட வந்தவர்களுக்கு நேர்ந்த கதி | Youth Make A Bold Move In Tamil Regionகிராமத்து இளைஞர்கள் அவர்களை துரத்திச் சென்று மன்னார் தள்ளாடி பெரிய பாலத்தடியில் பிடித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர்கள் மன்னார் நகரப் பகுதியில் சாவற்கட்டு,மற்றும் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது திருடப்பட்ட மாடுகள் கட்டைக்காடு மற்றும் மற்றும் உமநகரி கிராமங்களை சேர்ந்த உரிமையாளர்கள் உடையது என தெரிய வந்துள்ளது.

குறித்த இரு மாடுகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முருங்கன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

நானாட்டான் பிரதேசத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலையிலும் பாரிய சிரமப் பட்டு வளர்க்கும் கால்நடைகள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.