பறந்து கொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்களுக்கு இளைஞன் செய்த மோசமான செயல்

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்களுக்கு இளைஞன் செய்த மோசமான செயல்

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த சவுதி அரேபியா பிரஜை ஒருவர், விமான பணிப்பெண்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்துள்ளார்.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்களுக்கு இளைஞன் செய்த மோசமான செயல் | Oung Man Misbehaves With Flight Attendants

விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க தயாராகும் போது, விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் தங்களது இருக்கை பட்டி  அணிந்து தங்கள் இருக்கையில் அமர வேண்டியது அவசியமாகும் சந்தேக நபர் அந்த விதியை மீறி கழிவறைக்குச் செல்ல முயன்ற நிலையில் பணிப்பெண்கள் அவரை தடுத்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பணிப்பெண்கள் இது தொடர்பாக விமானிக்கு அறிவித்ததையடுத்து விமானம் தரை இறக்கிய பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.