உடலில் இரத்த கசிவுடன் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண் ; வீட்டிற்குள் அரங்கேறிய மர்ம மரணம்

உடலில் இரத்த கசிவுடன் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண் ; வீட்டிற்குள் அரங்கேறிய மர்ம மரணம்

காலியில் பத்தேகம - மஹாலியனகேவத்த பகுதியில் நேற்று (26) இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 உயிரிழந்தவர், பத்தேகம, சந்தரவள பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உடலில் இரத்த கசிவுடன் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண் ; வீட்டிற்குள் அரங்கேறிய மர்ம மரணம் | Mysterious Death Inside A House

வீட்டில் தனியாக வசித்துவந்த குறித்த பெண், பல நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ள நிலையில் வீட்டில் விளக்குகள் எரிந்ததால் சந்தேகம் இருப்பதாக பத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பத்தேகம பொலிஸார் குறித்த வீட்டை சோதனை செய்தபோது, குறித்த பெண் வீட்டின் தரையில் நிர்வாணமாகக் கிடந்துள்ளதுடன், அவரது உடலிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.