இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வினை பதிவு செய்து வருகின்றது.  

உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாவாக உயர்ந்திருந்தது.

இதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (28)  3,000 ரூபாவினால் குறைந்துள்ளது.

இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை | Srilanka Gold Price

எனினும் இன்று (28) , செட்டியார் தெரு தங்க சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 325,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை298,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.