யாழில் பப்ஜி விளையாட்டால் விபரீதம் ; குடும்பத்தாரை மிரளவிட்ட இளைஞன், மயிரிழையில் தப்பிய உயிர்

யாழில் பப்ஜி விளையாட்டால் விபரீதம் ; குடும்பத்தாரை மிரளவிட்ட இளைஞன், மயிரிழையில் தப்பிய உயிர்

யாழ்ப்பாணத்தில் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழில் பப்ஜி விளையாட்டால் விபரீதம் ; குடும்பத்தாரை மிரளவிட்ட இளைஞன், மயிரிழையில் தப்பிய உயிர் | Shock In Jaffna Over Youth S Act For Pubg Game

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்.

அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார்.