வீட்டிற்குள் நடந்த போதை விருந்து ; இளம் பெண்ணுடன் சிக்கிய கும்பல்
பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டிற்குள் இடம்பெற்ற போதை விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் உள்ளிட்ட 13 பேரை பொலிஸாா் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது போதைப்பொருள் பாவித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பொலிஸ் பிரிவில் உள்ள வல்பொலவின் புனிலவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த விருந்து நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் ஜா-எல, கம்பஹா, கிரிபத்கொட, களனி மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.