அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

அம்பலாங்கொடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை அம்பலாங்கொடை நகரில் இடம்பெற்றுள்ளது.

அம்பலாங்கொடை நகரத்தில் உள்ள நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றிய ஒருவரே சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி | Shooting In Ambalangoda One Killed

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.