ஒரே நாளில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம் : இன்றைய நிலவரம்

ஒரே நாளில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம் : இன்றைய நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (22) அதிகரித்துள்ளதாக தகவல் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையுடன் (20) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலையானது 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாட்களுக்கு முன் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் தற்போதைய தங்க விலை நிலவரப்படி  22 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரே நாளில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம் : இன்றைய நிலவரம் | Gold Price Rises By Rs 4000 In The Gold Market

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.