வெனிசூலாவின் கப்பலை நிறுத்திய அமெரிக்கா: எண்ணெய் விலையில் உயர்வு
வார இறுதியில் வெனிசுலாவின் எண்ணெய் கப்பலை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதை அடுத்து, இன்று (22.12.2025) ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, யு.எஸ்.வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சாய் எண்ணெய் 34 சதம் அல்லது 0.6 வீதத்தால் உயர்ந்து, GMT 2323 நிலவரப்படி பீப்பாய்க்கு 56.86 டொலர்களாக இருந்தது.
இதேவேளை அமெரிக்கா மற்றொரு கப்பலையும் பின்தொடர்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கப்பலும் தடுத்து நிறுத்தப்பட்டால், அது இரண்டு வாரங்களுக்குள், அமெரிக்காவின் மூன்றாவது நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.