அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டம் டிசம்பர் 31 ஆம் திகதி புதுப்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, தற்போது சலுகைகளைப் பெறுபவர்கள் மற்றும் பெறாதவர்களின் தகவல்கள் அதற்கேற்ப புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைககள் சபை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முன்னதாக நீடிக்கப்பட்டது.
அதன்போது, இம்மாதம் 10 ஆம் திகதி வரையில் வழங்ககப்பட்டிருந்த கால அவகாசம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.