ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி

இலங்கையில் பல்வேறு நபர்கள் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி செய்ததாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

ஒன்லைனில் பொருட்களை ஓடர் செய்வதற்கு முன், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைப்பு பற்றிய துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக மோசடிகள் நடப்பது குறித்து கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் ஆனந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி | Slcert Advises Caution Buying And Selling Online

எனவே, பண்டிகைக் காலத்தில் ஒன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.