மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவன் செய்த வீர செயல் ; இலங்கையில் சம்பவம்

மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவன் செய்த வீர செயல் ; இலங்கையில் சம்பவம்

கணவர் ஒருவர் முதலையுடன் சண்டையிட்டு  மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாய் சாலையில் பாத்திரங்களைக் கழுவும்போது எதிர்பாராத விதமாக முதலையால் பிடிக்கப்பட்டுள்ளார்.

மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவன் செய்த வீர செயல் ; இலங்கையில் சம்பவம் | Husband S Brave Act Saves Wife S Life

அந்த நேரத்தில் உடனடியாகச் செயல்பட்ட அவரது கணவர், தனது உயிருக்கு ஆபத்தை மீறி முதலைகளுடன் போராடி தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனைவியை உயிரை காப்பாற்ற தனது உயிரை துச்சமாக எண்ணி செயற்பட்ட குறித்த நபரின் இந்த துணிச்சலான செயல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.