லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு...!

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு...!

லிட்ரோ எரிவாயு புதிய விலை திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லிட்ரோகாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு தொடர்பான தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக பல மாதங்களாக பெரியளவில் மாற்றப்படவில்லை.

இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல் ஒக்டோபர் 2025 வரை எந்த விலை திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு...! | Litro Gas New Price Revision Date Announcement

அத்தோடு, அண்மைய விலை திருத்தம் (அதிகரிப்பு) ஜூலை 2025 இற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறான நிலையில் நேற்று (01) நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.