கிணற்றில் விழுந்து மூன்றே வயதான குழந்தை பலி

கிணற்றில் விழுந்து மூன்றே வயதான குழந்தை பலி

பேருவளை - மக்கொன, அக்கர மலை புதிய வீதி பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தத நிலையில், திடீரென காணாமல் போனதால் குடியிருப்பாளர்கள் சுற்றியுள்ள வீடுகளிலும் தேடி பயாகல காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்துள்ளனர்.

அதன்போது, வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கிணற்றில் விழுந்து மூன்றே வயதான குழந்தை பலி | Three Year Old Child Dies After Falling Into Well

இந்த நிலையில், பயாகல காவல்துறையினர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த குழந்தை சம்பந்தப்பட்ட குடும்பத்தின் இரண்டாவது குழந்தையான முகமது ரிஸ்வான் முகமது அயன் (3) என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.