வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு ; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற கிராமங்களில் கனமழையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதில் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது.

அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு, வீதியை வெட்டி, பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெள்ள நீரை வழிந்தோட செய்யும் வகையில், JCB இயந்திரம் மூலம் பாதுகாப்பாக தற்காலிக கால்வாய்களால் நீர் வடிந்தோடச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் இடம்பெறுமாக இருந்தால் உடன் செயற்படுவதற்காக மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தினர், கடற்படை உள்ளிட்ட முப்படையினரும், தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பானர் தெரிவித்தார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் வாகனேரிப் பகுதியில் 45.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 33.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 22.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுயியில 23 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கல்முனைப் பகுதியில் 25.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வநிலைய அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர்ட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.