தற்காலிகமாக செயலிழந்த அரச இணையத்தளம் ; மக்களுக்கு வெளியான அறிவிப்பு
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏதேனும் விசாரணைகள் இருப்பின் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு, இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.