செல்ஃபி முயற்சியால் 100 அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி!
பதுளை - எல்ல, லிட்டில் எடம்ஸ் சிகரத்தில் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி சிறுமி ஒருவர் மீட்புக் குழுவால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இன்று செல்ஃபி எடுக்க முயன்றபோது சிறுமி கிட்டத்தட்ட 100 அடி பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவசர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் சவாலான நிலப்பரப்பின் மத்தியில் மீட்புப் பணியாளர்கள் குழந்தையை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

மீட்புக்குப் பிறகு குழந்தையின் தாய் உணர்ச்சிவசப்பட்டு, தனது மகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதால் தான் நிம்மதி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இதன்போது உயரமான சுற்றுலா தலங்களில், குறிப்பாக பாறை ஓரங்களுக்கு அருகில் புகைப்படம் எடுக்கும்போது அல்லது செல்ஃபி எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் பார்வையாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.