யாழில் இளைஞனின் உயிரை பறித்த சொகுசு புகையிரதம் ; புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை

யாழில் இளைஞனின் உயிரை பறித்த சொகுசு புகையிரதம் ; புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(10) இடம்பெற்ற புகையிரத விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில்  23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழில் இளைஞனின் உயிரை பறித்த சொகுசு புகையிரதம் ; புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை | Luxury Train Kills Jaffna Youth Public Demandsயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் பயணித்த சொகுசு புகையிரதத்துடன், அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த புகையிரத கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில் , பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் , தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.