காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு - யாழில் சம்பவம்

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு - யாழில் சம்பவம்

யாழில் காய்ச்சல் காரணமாக ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறை - ஹெலன்தோட்டத்தை சேர்ந்த கிறிஸ்ரி ஜெயானந்தன் யூட்கிமோசன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி காலை இவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

காய்ச்சல் குணமாகாததால் அவர் கடந்த 22ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு - யாழில் சம்பவம் | Young Man In Jaffna Dies Due To Fever

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.