பாடசாலை மாணவியை பலிகொண்ட விபத்து

பாடசாலை மாணவியை பலிகொண்ட விபத்து

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமி அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவியை பலிகொண்ட விபத்து | The Accident That Claimed The Life Of A Schoolgirl

கானதோல - இலுக்குதென்ன வீதியின் 79ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று (06) நண்பகல் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த மாணவி மீது அதே திசையில் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்து தொடர்பாக லொறி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். எலபாத்த பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.