அவிசாவளையில் கோர விபத்து! காரில் பயணித்த மூவர் மரணம்
அவிசாவளை, தல்துவ - அமிதிரிகல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐவர், உடனடியாக அவிசாவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர்.

காரில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.