இன்று முதல் நாட்டில் அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள்

இன்று முதல் நாட்டில் அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள்

அஞ்சல் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண மற்றும் பதிவு செய்யப்பட்ட கடிதங்களுக்கான கட்டணம் 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 50 ரூபாயாக இருந்த முத்திரையின் விலை இன்று முதல் 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதனிடையே, ஏனைய கட்டண வகைகளும் தலா 20 ரூபாயால் அதிகரிக்கப்படும் என அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் நாட்டில் அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் | Postal Charges To Increase From Today

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டில் அஞ்சல் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.