விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2.5 பில்லியன் ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக வங்கி உதவியின் கீழ் 2.5 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மாடுகள், பன்றிகள், ஆடுகள், பிரொய்லர் கோழிகள் அழிக்கப்பட்ட பண்ணைகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகைகளுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கி உதவியின் கீழ் 2.5 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விலங்குகளை நோய்களில் இருந்து பாதுகாப்பதே இந்த தடுப்பூசி செயல்முறையின் நோக்கம், இது சுமார் 2 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அனர்த்தங்களால் அழிக்கப்பட்ட பண்ணைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவும் வழங்கப்படும்” என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.