19 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி முடிவுகள்

19 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி முடிவுகள்

19 ஆண்டுகளுக்குப் பிறகு லிபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி உரிமங்களுக்கான ஏல முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளன.

இதில் செவ்ரான் (Chevron), எனி (Eni), கட்டார் எனர்ஜி (QatarEnergy) மற்றும் ரெப்சோல் (Repsol) போன்ற உலகின் முன்னணி எரிசக்தி நிறுவனங்கள் உரிமங்களை வென்றுள்ளன.

லிபியாவின் தேசிய எண்ணெய் கழகம் (NOC), 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக நடத்திய இந்தப் பெரிய அளவிலான ஏலத்தில், நிலப்பரப்பு மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டங்களை (Blocks) சர்வதேச நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளது.

19 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி முடிவுகள் | Results Libya S Oil And Gas Drilling Auction Been

இத்தாலியின் எனி (Eni) மற்றும் கட்டார் எனர்ஜி (QatarEnergy) ஆகிய நிறுவனங்கள் இணைந்து மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த எரிவாயு செறிந்த ஆழ்கடல் பகுதியை வென்றுள்ளன.

அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான செவ்ரான் (Chevron), லிபியாவின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பகுதியான 'சிர்ட் பேசினில்' (Sirte Basin) அகழ்வாராய்ச்சி உரிமத்தைப் பெற்றுள்ளது.

ஸ்பெயினின் ரெப்சோல் (Repsol) தலைமையிலான ஹங்கேரியின் MOL மற்றும் துருக்கியின் TPOC ஆகிய நிறுவனங்களைக் கொண்ட கூட்டணிக்கு இந்த ஆழ்கடல் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

19 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி முடிவுகள் | Results Libya S Oil And Gas Drilling Auction Been

நைஜீரியாவின் எய்ட்டியோ (Aiteo) நிறுவனம் தெற்கு லிபியாவில் உள்ள முர்சுக் பேசினில் உரிமம் பெற்றுள்ளது.

இது ஆப்பிரிக்காவின் தனியார் நிறுவனமொன்று லிபியாவில் தடம் பதிக்கும் ஒரு அரிதான நிகழ்வாகும். அரசியல் ரீதியாக லிபியா கிழக்கு மற்றும் மேற்கு எனப் பிரிந்திருந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதே ஒரே வழி என்பதால் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள லிபியா, ரஷ்யாவிற்கு மாற்றாக ஐரோப்பாவிற்கு எரிசக்தி வழங்கும் முக்கிய நாடாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.