யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்...!

யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்...!

யாழில் டிப்பரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (13-02-2026) சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்குச் சந்தியிலிருந்து நிலாவரை செல்லும் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த டிப்பருடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்...! | Jaffna Punnalaikattuvan Tipper Bike Accident

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துச் சம்பவம் குறித்து விசாரணைகளைச் சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.