இலங்கையில் நடுவீதியில் பல தடைவைகள் சுட்டுக்கொல்லப்பட்ட தம்பதி ; சட்டதரணியின் பகீர் பின்னணி

இலங்கையில் நடுவீதியில் பல தடைவைகள் சுட்டுக்கொல்லப்பட்ட தம்பதி ; சட்டதரணியின் பகீர் பின்னணி

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

குறித்த சட்டத்தரணி 'கரன்தெனிய சுத்த' என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் நடுவீதியில் பல தடைவைகள் சுட்டுக்கொல்லப்பட்ட தம்பதி ; சட்டதரணியின் பகீர் பின்னணி | Couple Shot Dead Multiple Times

அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை 'லொகு பெட்டி' என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொலை சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.