திருமண ஊர்வல டிஜேவால் விடிய விடிய கலவரம் ; போடப்பட்ட காலவரையற்ற ஊரடங்கு, குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

திருமண ஊர்வல டிஜேவால் விடிய விடிய கலவரம் ; போடப்பட்ட காலவரையற்ற ஊரடங்கு, குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

நேபாளத்தின் மாதேஷ் மாகாணத்தில் உள்ள ரௌதாஹட் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் சீதாமர்ஹி எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட டிஜே சத்தம் தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கல்வீச்சு தாக்குதலாக உருவெடுத்தது.

திருமண ஊர்வல டிஜேவால் விடிய விடிய கலவரம் ; போடப்பட்ட காலவரையற்ற ஊரடங்கு, குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் | Wedding Procession Dj Causes Indefinite Curfew

சனிக்கிழமை காலை கலவரம் தீவிரமடைந்த நிலையில், கலவரக்காரர்கள் பொலிஸாரின் வாகனம் ஒன்றிற்கு தீ வைத்தனர்.

நிலைமையை கட்டுப்படுத்த சனிக்கிழமை மதியம் 1 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை தொடர்பாக திட்டமிட்ட முக்கிய நபர் உட்பட 20 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 நேபாள நாடாளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைதியை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.