காதலியின் தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த இளவயது காதலன்

காதலியின் தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த இளவயது காதலன்

தனது காதலியின் தந்தையை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் களனியைச் சேர்ந்த 16 வயது மாணவனே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவியுடன் காதல் உறவைத் ஏற்படுத்தியிருந்தார். இருவரும் களனிப் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.

பாடசாலை செல்லும் மாணவர்கள் என்பதால் உறவை முறித்துக் கொள்ளுமாறு மாணவியின் தந்தை மாணவனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காதலியின் தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த இளவயது காதலன் | Student Stabbed Girl Friends Father

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து மாணவன், மாணவியின் தந்தையை கத்தியால் குத்தினார்.

உடனடியாக தாக்குதலுக்குள்ளான தந்தை முல்லேரியாவ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக களனி பொலிஸ் வழக்கு நடவடிக்கைப் பிரிவின் சார்ஜென்ட் பாலசூரிய நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பினரும் முன்வைத்த தகவல்களை கருத்தில் கொண்ட கூடுதல் நீதவான், மாணவனை பிணையில் விடுவித்தார். மேலும் விசாரணை மே மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.