நடுவீதியில் கை,கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு இளைஞர் கொலை!

நடுவீதியில் கை,கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு இளைஞர் கொலை!

களுத்துறை  - பாணந்துறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று (03) காலை பாணந்துறை - கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

நடுவீதியில் கை,கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு இளைஞர் கொலை! | Panadura Dead Body Is Found

இந்த கொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.