சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

நடைபெற்று முடிந்த 2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னரே வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே (Indika Kumari Liyanage) தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி முதலாம் கட்டம் மார்ச் 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக கூறியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு | 2025 Gce O Level Exam Results Release Date Doe

சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மதிப்பீட்டு மற்றும் செயன்முறைப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த உடனேயே, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதித் திகதி தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.