இன்று முதல் எரிபொருளுக்காக மீண்டும் நடைமுறைக்கு வந்த திட்டம் ; QR குறியீட்டை பெறும் வழி முறை

இன்று முதல் எரிபொருளுக்காக மீண்டும் நடைமுறைக்கு வந்த திட்டம் ; QR குறியீட்டை பெறும் வழி முறை

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமை இன்று  (15) காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் செல்லுபடியாகும் QR குறியீடு இல்லாமல் எந்த எரிபொருள் நிரப்பு நிலையமும் எரிபொருள் வழங்காது என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று முதல் எரிபொருளுக்காக மீண்டும் நடைமுறைக்கு வந்த திட்டம் ; QR குறியீட்டை பெறும் வழி முறை | Plan Revived Again For Fuel Supplyஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமையும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணும் மாற்றமில்லையெனில்,  fuelpass.gov.lk இணையதளத்தின் “Vehicle Login” பகுதியின் மூலம் தங்களது QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

வாகனத்தின் உரிமை அல்லது தொலைபேசி எண் மாறியிருந்தால், அவர்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk என்ற இணையதளத்தில் “Vehicle Registration” பகுதியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல், இதுவரை QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 2026 மார்ச் 15 காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk இணையதளத்தின் மூலம் பதிவு செய்து QR குறியீட்டை பெற முடியும்.